Pages

Thursday, October 10, 2013



ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

  
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அர்குர்ஆன் 23:99,100)

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது. இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்கு திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல்நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இவ்வாறு மனிதன்கேட்கிறான்நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவதுஇயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால்பிறரைப் பயமுறுத்தவும்பிறருக்குத் தொல்லை தரவும்பிறர் மீது மேலாடிஅமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத்திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும்மனிதன் மரணித்த பின்புஅவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸஹ் எனும் அரபிச் சொல்இடம் பெற்றுள்ளதுபர்ஸஹ் என்றால் கண்களுக்குப் புலப்படாதஉடைக்க முடியாததிரை என்பது பொருள்இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ளமற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. என்ற கருத்தை 55வது அத்தியாயம்19,20 வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்விஞ்ஞானிகளும் இதனைஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும்,ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

அதே வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன்பயன்படுத்தியுள்ளான்மனிதன் இறந்த பின் அவனுக்கும் இவ்வுலகுக்கும் இடையே"பர்ஸஹ் எனும் திரை போடப்படுவதாக வல்ல இறைவன் குறிப்பிடுகின்றான்.இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாதுஎன்பதை இதன் மூலம் அறிவிக்கின்றான்இறைவனின் இவ்வசனத்தை நம்பக் கூடியஒரு முஸ்லிம்ஆவிகள் வந்து நடமாடுவதை எப்படி நம்ப முடியும்ஒன்றுக்கொன்றுமுரணான இரண்டு நம்பிக்கைகள்ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

 "பர்ஸஹ் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும்போடப்படுவதில்லைமாறாகமனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும்காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும்இறைவன் அதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும்ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போதுஅனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்பேய்களுக்குஇஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதிசெய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லைஎன்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்அவர்கள் இரண்டாவது கருத்துக்குஇடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூற்கள் : புகாரி, முஸ்லிம்

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபி (ஸல்) அவர்களின் போதனையை பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் ​உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் "முன்கர் மற்றொருவர் "நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி "உறங்குவீராக! என்று கூறப்படும். "நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் "நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் "இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் "நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி "இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும் கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபி (ஸல்அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும்பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment