Pages

Thursday, March 7, 2013

போப் ஆண்டவர் ராஜினாமா: - மறைக்கப்பட்ட உண்மைகள்!

கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர்என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர். போப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி
28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான். இதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர் பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப்: இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட .....

மேலும் அறிய....

No comments:

Post a Comment