Pages

Saturday, February 9, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர ஆலோசனை கூட்டம்

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07/02/2013 வியாழன் அன்று இரவு 11 மணிக்கு கிளை மாதாந்திர ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தொடக்கத்தில் பேசிய கிளைச் செயளாலர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை வழங்கினார். மேலும் புதிதாக கட்டப்பட இருக்கும் தலைமையக கட்டிட நிதி வசூல் சம்பந்தமான விபரங்களையும் தெளிவுபடுத்தினார். அதன்பின் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "நிலையான நல்லறம்!" என்ற தலைப்பில் சிறப்புரையற்றினார், மேலும் கிளையின் நற்பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும் என்று தெளிவாக எடுத்துக்கூறினார். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.





No comments:

Post a Comment