Pages

Monday, December 31, 2012

நிலமெல்லாம் ரத்தம் - 18

18] முகம்மது சொன்னது சரியே


சரித்திரபூர்வமாக இன்று நமக்குக் கிடைக்கும் சான்றுகளின்படி கி.பி. 619-ம் ஆண்டு வரையில்கூட இஸ்லாம் அத்தனை ஒன்றும் வேகமாகப் பரவிவிடவில்லை. அரபு தேசங்கள் பலவற்றில் முகம்மது நபியின் செல்வாக்கு பரவியிருந்தது; அவரை அடியற்றி, இஸ்லாத்தில் பலர் இணைந்துகொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் மத மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லிவிடமுடியாது. முகம்மது ஒரு நபிதான் என்று ஏற்பவர்கள் இருந்தாலும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.அந்த 619-ம் வருடம் முகம்மதுக்கு ஐம்பது வயதானது. அதே வருடத்தில், அறுபத்து ஐந்து வயதான அவரது முதல் மனைவி கதீஜா காலமானார். உலகின் முதல் முஸ்லிம் பெண்மணி. பல அரபுப் பெண்கள் இஸ்லாத்தில் இணைவதற்குக் காரணமாக விளங்கியவர். முகம்மதுவின் உறவினர்கள் பலரேகூட இஸ்லாத்தை ஏற்பதற்கு கதீஜா மறைமுகக் காரணமாக இருந்து ஏராளமான உதவிகள் செய்திருக்கிறார். அவரது மரணம் முகம்மதுவுக்கு மட்டுமல்ல; அன்றைய தேதியில் இஸ்லாத்துக்கே மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு மரணம், முகம்மதைச் சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்த அவரது பெரியப்பா அபூதாலிப்பினுடையது. குறைஷியருக்கும் முகம்மதுவுக்கும் பகை முற்றிவிடாமல் இருக்க தம்மால் ஏதாவது செய்யமுடியுமா என்று இறக்கும் வரை முயற்சி செய்துபார்த்த ஒரு நல்ல ஆத்மா அவர். அவரும் அதே வருடம் இறந்து போனார்.ஆனாலும் துயரத்தில் துவண்டுபோய் அமர்கிற அளவுக்கு முகம்மதுவுக்கு அப்போது அவகாசம் இருக்கவில்லை. வெகுநாட்கள் மெக்காவில் அவர் வசித்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு எதிர்ப்பாளர்களின் வன்முறை நடவடிக்கைகள் மிகுந்துகொண்டிருந்தன. ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து எங்காவது இடம் மாறினால்தான் சரிப்படும் என்று பலர் தொடர்ந்து கருத்துக்கூறி வந்தார்கள். ஆனால் முகம்மது ஒருபோதும் தாமாக ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தியதில்லை. எத்தனை காலமானாலும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இறைக்கட்டளை என்று ஒன்று அவருக்கு வந்து சேராதவரை இம்மிகூட அசையமாட்டார். ஆகவே, காலம் கனிவதற்காகக் காத்திருந்தார்.கனியத்தான் செய்தது. இடம் மாறுவதற்கல்ல. இன்னொரு விஷயத்துக்கு. அந்த ஒரு சம்பவம்தான் இன்றைக்கும் பாலஸ்தீனத்து அரேபியர்களால் தினசரி நினைத்துப் பார்க்கப்படுகிறது. நினைத்து நினைத்து மனம் கனக்கச் செய்கிறது. சொந்த மண். அதுவும் புனித மண். அங்கேயே அகதிகளாகத் தாங்கள் வாழ நேர்ந்திருப்பதன் அவலத்தை எண்ணி எண்ணி மனத்துக்குள் மறுகச் செய்திருக்கிறது.சொந்தச் சோகங்களினாலும் இஸ்லாத்தின் எதிரிகள் குறித்த கவலைகளாலும் கொஞ்சம் துவண்டிருந்த முகம்மது, அன்றைக்கு இரவு தொழுகைக்காக மெக்கா நகரின் மத்தியிலுள்ள க"அபாவுக்குப் போனார். தொழுதுவிட்டு, களைப்பில் அங்கேயே ஓர் ஓரமாகச் சாய்ந்து, கண் அயர்ந்தார்.எப்போதும் விழிப்பு நிலையிலேயே அவரை நாடி வரும் ஜிப்ரீல் அன்று உறங்கத் தொடங்கியபோது வந்து, தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த முகம்மதுவின் கைகளைப் பற்றி எழுப்பினார். அதன்பின் நடந்தவற்றை முகம்மதுவே வருணித்திருக்கிறார்:"...அவர் என் கைகளைப் பிடித்து எங்கோ அழைத்தார். கூடவே நடக்கத் தொடங்கினேன். பள்ளிவாசலின் வெளியே நாங்கள் வந்து சேர்ந்தபோது அங்கே வெள்ளை வெளேர் என்றொரு மிருகம் நின்றுகொண்டிருந்தது. பார்த்தால் கழுதை போலிருந்தது. கோவேறு கழுதை போலவும் தெரிந்தது. ஆனால் இரண்டுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட தோற்றம் கொண்ட ஏதோ ஒரு மிருகம். (இம்மிருகத்தை முகம்மது நபி "புராக்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.) அம்மிருகத்துக்கு இருபுறமும் அகன்ற பெரிய சிறகுகள் இருந்தன. கால்களும் சிறகுகளைப் போலவே அசைந்துகொண்டிருந்தன. எத்தனை பெரிய மிருகம் அது! அம்மிருகம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் கண்ணின் பார்வைத் தொலைவு நிகர்த்ததாக இருந்தது..."ஜிப்ரீல் வழிகாட்ட, முகம்மது அம்மிருகத்தின் மீது ஏறி அமர்ந்தார். பின்னாலேயே ஜிப்ரீலும் ஏறிக்கொண்டார். உடனே அந்த மிருகம் தன் பிரும்மாண்டமான சிறகுகளை அசைத்தபடி வானில் உயர்ந்து பறக்கத் தொடங்கியது. மதினா நகரின் மேலே அது பறந்து, வட திசையில் ஜெருசலேத்தைச் சென்றடைந்ததாக முகம்மது குறிப்பிடுகிறார்.இதுதான். இங்கேதான் ஆரம்பம். இப்ராஹிம் என்கிற ஆபிரஹாம் நபி வாழ்ந்த பூமி. மூசா என்கிற மோசஸுக்கு தோரா அருளப்பட்ட பூமி. ஈசா என்கிற இயேசுவுக்கு பைபிள் வழங்கப்பட்ட பூமி. முகம்மதுவுக்கு முந்தைய இறைத்தூதர்கள் பலருடன் சம்பந்தப்பட்ட ஜெருசலேம் மண். இறைவனின் விருப்பப்பிரதேசம். அங்கேதான் ஜிப்ரீல், முகம்மதுவை அழைத்துவந்தார்.முகம்மது நபி ஜெருசலேத்துக்கு வந்தது, இஸ்லாத்தின் சரித்திரத்தில் மிக, மிக, மிக முக்கியமானதொரு சம்பவம். அந்தப் பயணத்தின்போது முந்தைய நபிமார்கள் அனைவரும் முகம்மதுவை அங்கே சந்தித்ததாகவும் அனைத்து நபிமார்களும் சேர்ந்து தொழுகை நிகழ்த்தியதாகவும், தொழுகைக்குப் பின் விருந்துண்டதாகவும் (இவ்விருந்தில், திராட்சை ரசம் அடங்கிய பாத்திரம் ஒருபுறமும் பால் நிரம்பிய பாத்திரம் ஒருபுறமும் வைக்கப்பட்டிருந்தன. முகம்மது, திராட்சை ரசத்தைத் தொடாமல், பால் கிண்ணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதனாலேயே ஆசாரமான முஸ்லிம்கள் இன்றும் மதுவருந்துவது மத விரோதச் செயல் என்பார்கள்.) அதன்பின் முகம்மதுவை ஜிப்ரீல் வானுலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் இஸ்லாம் தெரிவிக்கிறது.அதற்கு முன், இலியாஸ், இயேசு போன்ற நபிமார்களுக்கு இதைப்போல் வானுலக யாத்திரை சித்தித்திருக்கிறது. முகம்மதுவுக்கு வானுலகில் ஓர் இலந்தை மரத்தினடியில் தெய்வீகப் பேரொளியின் தரிசனம் கிட்டியதாகச் சொல்லப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில்தான் முகம்மதுவுக்கு இஸ்லாத்தின் பிரமாணங்கள் குறித்த பல முக்கிய வசனங்கள் அருளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தினசரி ஐம்பது வேளை தொழவேண்டும் என்கிற இறை உத்தரவும் இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டதுதான். (ஆனால் "ஐம்பது வேளை தொழுவது என்பது மிகவும் சிரமம். இதைக் குறைத்துக் கேளுங்கள்" என்ற மூசா நபியின் ஆலோசனையின் பேரில் திரும்பத்திரும்ப இறைவனிடம் குறைத்துக்கொள்ளக் கோரி இறுதியில் ஐந்து வேளைத் தொழுகையை நிர்ப்பந்தமாக வைத்தார் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை.)ஜிப்ரீல் அழைத்துச் சென்று வானுலகம் கண்டு புவிக்கு மீண்ட முகம்மது, நேரே வந்து இறங்கிய இடமும் ஜெருசலேம்தான். அந்தக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட மிருகமான புராக், அவரை ஒரு குன்றின்மீது கொண்டுவந்து இறக்கிவிட்டது.இன்றைக்கும் ஜெருசலேம் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வரும் Dome of the Rock இந்தக் குன்றின் உச்சியில்தான் அமைந்திருக்கிறது. முகம்மது நபி, விண்ணுலகம் சென்று திரும்பி வந்து இறங்கிய இடத்தில், அச்சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு வழிபாட்டுத்தலம். ஜெருசலேம் நகரின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் இந்த வழிபாட்டுத்தலம் தென்படும். அப்படியரு அமைப்பு நேர்த்தி கொண்டது. இந்தக் குன்றுக் கோபுரமும் இதனோடு இணைந்த அல் அக்ஸா என்கிற மசூதியும்தான் பாலஸ்தீன் முஸ்லிம்களின் ஒரே சொத்து. இந்த இரு தலங்களையும் இணைத்து அவர்கள் பைத்துல் முகத்தஸ் என்று அழைப்பார்கள்.ஆனால் பாலஸ்தீன் என்று குறிப்பிடும்போதெல்லாம் அடையாளத்துக்கு Dome of the Rock படத்தை மட்டுமே தொடர்ந்து ஊடகங்கள் வெளியிட்டு வருவது (ஏனெனில் அதைப் படமெடுப்பதுதான் சுலபம்! குன்றுக் கோபுரத்தையும் கீழே உள்ள மசூதியையும் இணைத்துப் படமெடுப்பது மிகவும் சிரமமானதொரு காரியம்.) வழக்கமாகிவிட்டது. ஆகவே, Dome of the Rock தான் முஸ்லிம்களினுடையது; அல் அக்ஸா மசூதி இருக்குமிடம், முன்னாளில் இடிக்கப்பட்ட யூத தேவாலயம் என்று யூதர்கள் கூறி வருகிறார்கள்.இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் ஆணிவேர் இதுதான். கோயில் இருந்த இடம் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டது உலகெங்கும் பல இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவம்தான். பாலஸ்தீன் அல் அக்ஸா மசூதி விஷயத்தில் அப்படித்தான் நடந்ததா என்பதுதான் இங்கே பிரச்னை. மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ச்சிபூர்வமாகவும் அணுகவேண்டிய இந்த விஷயத்தைப் பின்னால் பார்க்கப் போகிறோம். இப்போது முகம்மது நபி திரும்பி வந்த கதையை நிறைவு செய்துவிடலாம்.ஜெருசலேம் குன்றின்மீது வந்து இறங்கி இளைப்பாறியபிறகு, முகம்மதுவை மீண்டும் மெக்காவுக்கே கொண்டுவந்து கிளம்பிய இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டார் ஜிப்ரீல்.மெக்காவிலிருந்து ஜெருசலேத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து வானுலகம் சென்று, திரும்பவும் ஜெருசலேம் வந்து, அங்கிருந்து மெக்காவிலுள்ள க"அபாவை அவர் அடைந்தபோது இன்னும் பொழுது விடிந்திருக்கவில்லை.விடிந்ததும் புறப்பட்டுத் தன் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற முகம்மது முந்தைய இரவு தனக்கு நடந்ததை, அப்படியே வரி விடாமல் அவரிடம் சொன்னார். இந்தச் சம்பவத்தை நான் மக்களிடம் கூறப்போகிறேன் என்றும் சொன்னார்.சாதாரண மனிதர்கள் நம்பக்கூடிய விஷயமா இது! அன்றைக்கு மெக்காவிலிருந்து புறப்பட்டு ஜெருசலேம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒருமாத காலம் ஆகும். மாலைத்தொழுகையை மெக்காவில் முடித்துவிட்டு இரவுத் தொழுகையை ஜெருசலேத்தில் நிகழ்த்திவிட்டுத் திரும்பியதாக முகம்மது சொன்னால் யார் நம்புவார்கள்?ஆனால் முகம்மது இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கிறவர் அல்லர். தமக்கு நேர்ந்ததை வார்த்தை மாற்றாமல் அப்படியேதான் சொன்னார். அவரது ஒன்றுவிட்ட சகோதரி அதை நம்பினாரா என்று தெரியவில்லை. ஆனால் குறைஷிகள் கைகொட்டி நகைக்கவும் கேலி பேசவும் இது ஒரு நல்ல காரணமாகிப் போய்விட்டது. முகம்மதுவை ஒரு பைத்தியக்காரர் என்றே அவர்கள் திட்டவட்டமாக முடிவுகட்டி, ஊரெங்கும் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். (ஆனால் ஓர் ஆச்சர்யம் இதில் உண்டு. பறக்கும் விலங்கின் மீதேறித் தான் சென்று திரும்பிய வழியில், கீழே சாலை மார்க்கமாகப் பயணம் செய்துகொண்டிருந்த யாத்ரிகர்கள், வர்த்தகக் குழுவினர் குறித்தும் அவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள், எத்தனை தொலைவு, அவர்கள் மெக்காவை வந்து அடைய எத்தனை காலமாகும் போன்ற விவரங்களையெல்லாம் துல்லியமாகத் தெரிவித்திருக்கிறார் முகம்மது. சம்பந்தப்பட்ட வர்த்தகக் குழுவினர்கள் குறித்து அவர் சொன்ன அடையாளங்களை அவர்கள் திரும்பி வந்ததும் ஒப்பிட்டுப் பார்த்து, முகம்மது சொன்ன அனைத்து விவரங்களும் சரியே என்று கண்டு வியந்திருக்கிறார்கள்.)இந்தச் சம்பவத்துக்குப் பின் முகம்மது மெக்காவில் தொடர்ந்து வசிப்பது மிகப்பெரிய பிரச்னையாகிப் போனது. நிச்சயமாகக் குறைஷிகள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது. குறிப்பாக, முகம்மதின் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அவரது தோழர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார்கள்.கி.பி. 622ல் அது நடந்தது. முகம்மது மெக்காவிலிருந்து யத்ரீபுக்கு இடம் பெயரலாம் என்று தீர்மானித்தார். யத்ரீப் என்பதுதான் அரபுப் பெயர். ஆனால் மதினா என்று சொன்னால்தான் பொதுவில் புரியும்.மதினா என்பது ஹீப்ரு மொழிப்பெயர். அன்றைக்கு அங்கே அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருந்த மொழியும் அதுதான். ஏனெனில் மதினாவில் அப்போது அரேபியர்களைக் காட்டிலும் யூதர்கள்தாம் அதிகம் வசித்துவந்தார்கள்.அரேபியர்களான குறைஷிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க யூதர்கள் நிறைந்த மதினா நகருக்கு முகம்மது இடம் பெயர நேர்ந்தது ஒரு சரித்திர வினோதம்தான். ஆனால் அடுத்த சில வருடங்களில் ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் இஸ்லாம் என்கிற ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதற்கு அங்கே தங்கியிருந்த காலத்தில் அவர் ஊன்றிய வித்துகள்தான் ஆதாரக் காரணமாக இருந்திருக்கின்றன.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 ஜனவரி, 2005

TNTJ ஜித்தா மண்டல இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


அல்லாஹ்வின் கிருபையால் 28-12-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநில துணைத்தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவா்கள் ஜும்மா உரை மற்றும் தொழுகை நடந்த பின் பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோதர, சகோதரிகளின் கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 300க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதிய உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. து.ஆவுடன் மஃரிப் தொழுகைக்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா மண்டல மாநில கட்டிட நிதி ரூபாய் 500000


அல்லாஹ்வின் கிருபையால் 27-12-2012 வியாழன் அன்று TNTJ ஜித்தா மண்டலம் சார்பில் மாநில தலைமைக்கான கட்டிட நிதியாக முதல் கட்டமாக 500000 (ஐந்து லட்சம்) ரூபாய் மாநில துணைத்தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.








TNTJ ஜித்தா மண்டல திட்டக்குழு கூட்டம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் 27-12-2012 வியாழன் அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் TNTJ ஜித்தா மண்டலத்தின் திட்டக்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவா்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் நிரவாகம் சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் 2012ல் தூய இஸ்லாத்தினை தழுவியவர்கள் விபரம்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் பணியில் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 2012 ஆம் ஆண்டு மட்டும் 53 நபர்கள் துய இஸ்ஸாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

 

இதுமட்டுமல்லாமல் சமுதாய சேவைகள் தனி நபர் தஃவா, ஜாதி மொழி வேறுபாடின்றி மருத்துவ சேவைகள் , பொதுசேவை முகாம்கள் என்று சென்று கொண்டிருக்கும் இவர்கள் பணிகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும், மென்மேலும் இது போன்ற நல்ல செயல்களின் பக்கம் இவர்களை என்றும் நிலைத்திருக்க செய்யவும், அழைப்புபணிகள் சிறந்து விளங்கவும் அல்லாஹ்விடம் (துவா) பிராத்தணை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

இஸ்லாத்தினை ஏற்றவர்களின் தேதி, பழைய பெயர, புதிய பெயர் விபரங்கள்:-

 

1. 03/01/2012 எதித்தா - ஈமான் பிலிப்பைன்ஸ்

2. 04/01/2012 கணேசன் - அப்துல் அஜீஸ் இலங்கை

3. 06/01/2012 Mr. Brown - அப்துர்ரஹ்மான் அமெரிக்கா {நியூயார்க்}

4. 07 / 01/2012 ருபேக்கா - மரியம் பிலிப்பைன்ஸ்

5. 10/01/2012 ரூபி - சாரா பிலிப்பைன்ஸ்

6. 11/01/2012 ஜீஜி - அப்துல்லாஹ் இலங்கை

7. 11/01/2012 அருள்தாஸ் - முஹம்மது அலி இலங்கை

8. 25/01/2012 பிக்கி - பாத்திமா  பிலிப்பைன்ஸ் 

9. 25/01/2012 லீனா - மரியம் பிலிப்பைன்ஸ்

10. 26/01/2012 மல்லிஹா - கதீஜா தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூர்

11. 25/01/2012 வரதன் - இப்ராஹிம் தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூர்

12. 11/02/2012 Dr ஓம்மி - கதீஜா பிலிப்பைன்ஸ்

13. 28/02/2012 ஜெனி - ஜன்னத் பிலிப்பைன்ஸ்

14. 29/02/2012 மேரி - மூனா பிலிப்பைன்ஸ்

15. 02/03/2012 ரோனா - அமல் பிலிப்பைன்ஸ்

16. 09/03/2012 வெள்ளை துரை - அப்துல் கலாம் தென்காசி-தரணி

17. 06/04/2012 அஸ்பின் பிலிப்பைன்ஸ்

18. 09/04/2012 ஜோயில் (JOIEL) - யூஃசுப் பிலிப்பைன்ஸ்

19. 21/03/2012 டயானா - ஹனான் பிலிப்பைன்ஸ்

20. 24/03/2012 ரெமீ - ஆயிஷா பிலிப்பைன்ஸ்

21. 28/03/2012 டிங்டிங் - மைசாரா பிலிப்பைன்ஸ்

22. 30/03/2012 ஜெனிப்பர் - கரீமாஹ் பிலிப்பைன்ஸ்

23. 13/04/2012 ரவிச்சந்திரன் - முஹம்மது ரபிக் தஞ்சை மாவட்டம் பனையக்கோட்டை

24. 14/04/2012 ரய்மோன் டினோரியோ - அப்துல் மாலிக் பிலிப்பைன்ஸ்

25. 14/04/2012 CRISTIN LEJERALDE - HANNA பிலிப்பைன்ஸ்

26. 14/04/2012 AMY MANGASUEY - SULAIJA பிலிப்பைன்ஸ்

27. 14/04/2012 BABYLINE - FATIMAH பிலிப்பைன்ஸ்

28. 14/04/2012 TENELLY PACTOL - AMEERA பிலிப்பைன்ஸ்

29. 14/04/2012 GEMMA ACERIT - JAMEELA பிலிப்பைன்ஸ்

30. 26/04/2012 பாலாஜி  - அப்துல்லாஹ் ஆந்திரா மாநிலம்பிராமன்சூர்

31. 26/04/2012 சந்திரகாந்த்  - முஹம்மது காலித் மஹாராஷ்ட்ரா லாத்தூர்

32. 03/05/2012 அபேத் பல்போ - ஜமீல் பிலிப்பைன்ஸ் - பூலக்கானை

33. 17-05-2012 Johnny Neniel - அப்துல்லாஹ் பிலிப்பைன்ஸ் - (Davao) தாவவ்

34. 05-06-2012 தமிழரசு - உஸ்மான் இலங்கை திருகோணமலை

35. 11 / 5 / 2012 சதிஸ் - சாதீக் ராமநாதபுரம் சாயல்குடி

36. 11 / 5 / 2012 சக்தி - அப்துல்லாஹ் மதுரை ரயில் நகர்

37. 29/06/2012 ராஜேஷ் - உமர் உத்திரபிரதேஷ் லக்னோ ஆலம்பாத்

38. 29/06/2012 கிருஷ்ணா - உஸ்மான் ஹைதராபாத் - சித்திக்பேட்டை

39. 30-07-2012 மனோன் தாம்பிக - அப்துல் மாலீக் மராவேன-புத்தளம்

40. 06-09-2012 இரவி - முஹம்மத் ரபிக் விருதாச்சலம்-காட்டூர்

41. 04-10-2012 ஜில்(GIL) - அப்துல்லாஹ் பிலிப்பைன்ஸ்

42. 11-10-12 இய்யன் - ஆய்மன் பிலிப்பைன்ஸ்

43. 08/11/2012 P.மகேந்திரன் - முஹம்மது சரீப் நாகைமீணம்பநல்லுர்

44. 09/11/2012 ரவி - முஹம்மத் அலி புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி

45. 09/11/2012 Mildred - மெல்ரெட் Mahah - மாஹா

46. 09/11/2012 Anne - அணி Asmah - அஸ்மா பிலிப்பைன்ஸ்

47. 30/11/2012 Jennifer - ஜெனிபர் Jannath - ஜன்னத் பிலிப்பைன்ஸ்

48. 30/11/2012 Nilda - நில்தா Maryam - மறியம் பிலிப்பைன்ஸ்

49. 30/11/2012 Rubeaka - ருபேக்கா Salmah - சல்மா பிலிப்பைன்ஸ்

50. 13/12/2012 கோபால் - சிராஜ்தீன் உத்திரப்பிரதேஷ்கோராப்பூர்

51. 14 /12 /12 அறியானா - ஹனான் பிலிப்பைன்ஸ் மிந்தனா

52. 20-12-2012 கிருஷ்ணா - அப்துல்லாஹ் ஆந்திரா

53. 21-12-2012 கந்தசாமி - முஹம்மது பைஃசல் ராமநாதபுரம் - பால்கரை

 

நாங்கள் முஸ்லிம்கள்:

 

"எவர் அல்லாஹ்வின் பக்கம்  (மக்களைஅழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோஅவரைவிட அழகிய சொல் சொல்பவர் யார்

(உலகப்பொதுமறை 41:33)