Pages

Thursday, October 4, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில்  28/09/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் கேளிக்கைகள்என்ற தலைப்பில்: கேளிக்கைகள் என்றால் என்ன? அது நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அமையவேண்டும்என்பதனை குர்ஆன்ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்!என்ற தலைப்பில்: கடந்தவார உலகளாவிய நிகழ்வுகளில் முக்கியமானவற்றை,  குறிப்பாக தமிழகம் முழுவதும் TNTJவின் கண்டன ஆர்பாட்டங்கள்,முற்றுகை போராட்டங்கள் ஆகிய அனைத்து விஷயங்களையும் தொகுத்து வழங்கினார்கள்.அதன்பின் கிளை பொருளாளர் சகோ.முஜாஹீத் அவர்கள் மூமின்களின் பண்புகள் என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள்மணி, டேவிட் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment