Pages

Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மகத்தான மனிதநேயச் சேவை முகாம்

சமூக சேவையில் இனமொழிமதம் பாராமல் மறுமைக்காகவே உழைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளில் சவூதி அரேபியா தபூக் நகர கிளையின் மற்றுமொரு சேவை….!!!!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 27-09-2012 வியாழன் அன்று "இந்தியன் இன்டர்நேஷ்னல் ஸ்கூல்வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தியத் தூதரக அதிகாரிகளின் குறைதீர்க்கும் வருகைக்கு பொது மக்களுக்கான உதவி முகாம் நடைபெற்றது. 
தூதரகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருந்தாலும் சிறிய பகுதிகளில் வசிப்பவர்கள் "பப்ளிக் சர்வீஸ்களை" நாடவேண்டும்இவைகளால் துரிதமாக செயல்பட இயலாது. அது மட்டும் அல்லாமல் கோப்புக்களில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலும் அவதிகளை சந்திக்க நேரிடும். இதுபற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்பாஸ்போர்ட் கோப்புக்களின் பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்கும் முகமாகவும் தூதரக அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனித நேயப்பணிகளை அறிந்து வைத்திருந்தமையால் தபூக் நகர "இந்தியன் இன்டர் நேஷனல் ஸ்கூல்" பிரின்ஸ்பல் சகோதரர் ஷம்சுதீன் அவர்கள் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தபூக் நகர கிளையை தொடர்பு கொண்டு இம்முகாமிற்க்கான உதவிகளை கேட்டுக்கொண்டனர். கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அழகிய முறையில் திட்டமிடப்பட்டு கிளை நிர்வாகிகள் தலைமையில் பெண்களுக்காக தனி பூத் ஒன்றும்ஆண்களுக்கு மூன்று பூத்துக்கள் அமைக்கப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் அனைத்து வித தூதரக தேவைக்கான விண்ணப்பப் படிவங்களையும் நிரப்பி கொடுக்கும் பணிகள் மிகத்துரிதமாக, செய்து கொடுக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனேக மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பலன் அடைந்தார்கள். குடிநீர்மற்றும் ஜூஸ் அனைவருக்கும் கிளை மூலம் வழங்கப்பட்டது. மேலும் ஜெரக்ஸ் மிசின் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் இலவசமாக ஆவணங்கள் நகல் எடுத்துக்கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இம்மையில் எந்தப்பலனையும் எதிர்பாராமல் மறுமைக்காகவே இவ்வுலகில் பம்பரமாக சுழன்று உழைத்ததை மாற்று மத மக்களும் கண்டு வியந்து பயனடைந்த அனைவரும், தூதரக அதிகாரிகளும் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment