அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில், ஹஜ் என்றால் என்ன? அது நமக்கு எப்படி கடமையாக்கப்பட்டது? என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்" என்ற தலைப்பில் கடந்தவார உலக நிகழ்வுகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கிளை பொருளாலர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இதில் பிறமத சகோதரர்கள், உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Pages
▼
No comments:
Post a Comment