அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 13-07-2012 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், இஸ்லாமி(ய பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார்கள். நீர் உணவளிப்பது, அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதாகும். என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்-புகாரி, அத்தியாயம்:1, ஹதீஸ் 28. அன்புள்ள ஜித்தா மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றூம் கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடங்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜித்தா மண்டலம் சார்பாக ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும், ஜித்தா மண்டலம் சார்பாக வரும் 10-08-2012 வெள்ளி அன்று கிலோ-14ல் உள்ள தாஃவா செண்டர் வளாகத்தில் சுமார் 500 பேர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்க்கு கஞ்சி, சிற்றுண்டி, பழங்கள், ஜூஸ், தண்ணீர், உணவு மற்றும் வாகன செலவிற்க்கு சுமார் 7500 ரியால் முதல் 8000 ரியால் வரை செலவாகும் என்று கணக்கிடுகின்றோம். வழக்கம்போல் கிளைகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் இந்த நன்மையான நிகழ்ச்சியில் உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் பங்களிப்பை மண்டல தலைவர் சகோ. நௌஷாத் அலி – 0562363972 அல்லது மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி – 0567122902. தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும். இப்படிக்கு. ஜித்தா மண்டல நிர்வாகிகள், ஜித்தா – சௌதி அரேபிய |
Pages
▼
No comments:
Post a Comment