அல்லாஹ்விம் மாபெரும் கிருபையால் கடந்த 23-03-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை சார்பில், கிளை தலைவர் சகோ.முஸ்தபா மற்றும் கிளை செயலாளர் ஹனீஃபா தலைமையில் மக்கா பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 50 பேர்கள் ஆர்வத்துடன கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு புறப்பட் பேருந்தில் பயண நோக்கத்திணையும், செல்லும் இடங்களின் சிறப்புகள் பற்றியும் விவரிக்கப்பட்டது. காலை உணவிற்க்குப்பின் ஹிரா குகைக்கு அழைத்து செல்லப்பட்டது. பின் ஜும் ஆ தொழுகைக்கு புனித ஹரம் அழைத்து செல்லப்பட்டது. மதிய உணவிற்க்குப்பின், மினா, முஸ்தலிஃபா சென்ற பின் அரஃபா திடலில் சகோ. முஸ்தபாவின் சிறிய உரைக்குப்பின் நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் மறைந்திருந்த தவ்ர் குகைக்கு அனைவரையும் அழைத்து செல்லப்பட்டது. பின் மக்காவிலிருந்து ஜித்தா திரும்பும் வழியில் பேருந்திலேயே மார்க்க சம்பந்தபட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா வந்து சேர பயணம் இனிமையாக து.ஆ வுடன் நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் |
Pages
▼
No comments:
Post a Comment