Pages

Tuesday, March 27, 2012

ஜித்தா-தபூக் கிளை மனிதநேய சேவை

ஜித்தா மண்டலம் தபூகில் கடந்த  11/01/2012  அன்று புதன் அன்று காலை 11 மணியளவில் நெல்லை மாவட்டம் கடையநல்லுர் கம்பனேரியைச் சேர்ந்த திரு.அழகர்சாமி பெருமாள் பிள்ளை அவர்கள் தபூக்மதீனா  நெடுஞ்சலையில் அவர் பணிபுரியும் இடத்தில் இறந்து கிடக்கின்றார் என்ற செய்தி தபூக் கிளையின் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தது. செய்தி அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்வாகிகள் அழகர் சாமி அவர்கள் மரணித்து விட்டதை உறுதி செய்து விட்டு, அவருடைய [கஃபீல்] முதலாளிக்கு தகவல் அனுப்பி, போலிசாரின் உதவியுடன் தபூக் King Khaled Hospitalக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது.

அழகர் சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து  கடந்த  13/01/2012  அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. (தகவல் இணைக்கப்பட்டுள்ளது) இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின் படி கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், து, தலைவர் சகோ.முஜாஹீத் அவர்கள் மூலமாக கடையநல்லுர்  TNTJ கிளையின் மூலம்  கடையநல்லுர்  கிருஷ்னாபுரத்திலுள்ள அழகர் சாமியின் மனைவி-முருகேஷ்வரி மற்றும் மகன்- சுடலைதுரை,   மற்ற உறவினர்களையும் சந்தித்து, Power Of Attorney  கடிதத்தை பெற்று, அதனை ஜித்தாஹ் மண்டலத்திலுள்ள சகோ. நூர் முஹம்மது [கீழகல்லந்திரி-மதுரை] அவர்களின் பேருதவியால் ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகளை விரைந்து முடித்து பெறப்பட்டது.

 

அழகர்சாமி அவர்களின் சடலத்தை தாயகத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை TNTJ தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர்அல்ஹம்துலில்லாஹ். கடந்த  19/03/2012  திங்கள் அன்று  தபூக்  ஏர்போர்ட்டில் பணிபுரியும் கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களின் உதவியால் அழகர்சாமி அவர்களின் சடலத்தை தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அல் ஹம்து லில்லாஹ்.

 

அதனைப்பெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை தபூக்கிளை நிர்வாகிகள் கடையநல்லூர் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதில் அவர்கள் சம்மதித்ததுடன், கொச்சியிலிருந்து(கேரளா) கம்பனேரிக்கு உடலை கொண்டுவர ஆம்புலன்ஸ் கட்டணம் 16000 ரூபாய் ஆகும் என்றும், சேவை அடிப்படையில் பெட்ரோல், ஓட்டுனர் சம்பளத்திற்க்காக மட்டும் 10000 ரூபாய் கொடுத்தால் போதும் என்றதுடன் அதிலும் பாதி தொகையினை கடையநல்லூர் கிளைகள் ஏற்றுக்கொள்வதாக கூறி உடலை பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

இதனை தொடர்ந்து இழப்பீட்டு தொகையாக இறந்தவரின் முதலாளியிடம் தபூக் கிளை நிர்வாகிகள் முயற்ச்சித்த பொழுது, முதலாளி தான் கம்பெனி நடத்தவில்லை என்றும், இவர் ஒரு ஆளை வைத்துக்கொண்டு மட்டும் லாரி வாடகைக்கு விட்டும், சில சில்லறை வேலைகளை செய்து கொண்டு வருவதாகவும், தன்னால் பெரிய இழப்பீட்டு தொகைகளை கொடுக்க இயலாது என்றும் கூறியதுடன், இறந்தவர் சில மாதங்களுக்கு முன் அவரின் கவன குறைவால் லாரி பொருள்களுடன் எரிந்து விட்டதாகவும், அதனால் தனக்கு இழப்பீடாக 18000 ரியால் இறந்தவர் தரவேண்டி உள்ளது என்றும் அதனை தான்தான் இனி அடைக்க வேண்டும் என்றும் கூறினார்(இந்த தகவலை இறந்தவரின் மகனும் போன் மூலம் உறுதி செய்தார்). மேலும் உடலை இங்கேயே அடக்கம் செய்தால் அதற்க்குண்டான தொகையினையாவது தன்னால் கொடுத்திருக்க முடியும், அதையும் இவர்கள் செய்யவில்லை, இதில் தனக்கு 7500 ரியால்(1 லட்ச ரூபாய்) செலவாகி உள்ளது. எனவே, அவரின் 10 நாட்கள் மீதி சம்பளம் என்னிடம் உள்ளது அதனை ஒரு மாத சம்பளமாக தருகிறேன் என்று கூறி 1000 ரியால் (13000 ரூபாய்) கொடுத்துள்ளார். கிளை நிர்வாகிகள் காவல் துறையினரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் அதிகம் பெற்று தருமாறு கோரினர். ஆனால் அவரும் இறந்தவரின் முதலாளி அத்தனை வசதி உள்ளவர் அல்ல. இவர் இத்தனை தூரம் செய்ததே அல்லாஹ்விற்க்கு அஞ்சிதான் எனவே மேற்கொண்டு கேட்காதீர்கள் என்று கூறிவிட்டனர். அந்த தொகையினையும் அவரது பொருட்களையும், கிளை து.செயலாளர் சகோ.முஜாஹிதீன் (கடையநல்லூர்) மூலம் தபூக் கிளை நிர்வாகிகளால் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தபூக் கிளை நிர்வாகிகள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டும் நாடி மதங்கள் கடந்து மனிதநேயத்துடன் மாற்று மதத்தவருக்கு உதவிய இந்த செயல் அல்லாஹ்வால் முழுமையாக ஏற்றுக்கொள்ளபட து.ஆ செய்வோம்.

 

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளுங்கள், பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளாதீர்கள். (திருக்குர் ஆன் 5:2)

 

நம் விஷயத்தில் முயற்ச்சி செய்வோர்க்கு, நமது வழிகளை காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கின்றான். – (திருக்குர் ஆன் 29:69)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூதரகத்திற்க்கு அனுப்பிய கடிதம்


---- Forwarded Message -----
From: Abdul Rahman <
abdulrahmantabuk@yahoo.com>
To: "
conscw@cgijeddah.com" <conscw@cgijeddah.com> 
Cc: "
maatabuktntj@yahoo.com" <maatabuktntj@yahoo.com> 
Sent: Friday, 13 January 2012, 19:58:25
Subject: Reg-Mr.Alagarsamy's Death

Bismillahirrahmannirraheem

 

Dear Sir,

 

How are you?

 

Mr.Abdul Aziz (TNTJ President-Tabuk Branch) gathered some information about

Mr.Alagar Sami Perumal Pillai (belongs to Krishnapuram- Nellai Dist , TN ) who died 2 days before in Tabuk while he was selling the grass in the Medinah Road , Tabuk. The reason for his death is still unknown and now his body has been kept in the Mortuary at King Fahd Hospital (MOH-Tabuk).

 

His Kafil name is Mr. Salah and his cell number is 0504797618.

 

Also the cell phone number (in India ) of Mr Alagar Sami's son Mr. Sudalaidurai is             9942552085       and his wife Mrs. Murugeshwari is 8344890437.

 

Today we met Mr.Samsuddin at International Indian School , Tabuk and we gave these information to him.

 

We are in need of further information how to proceed this issue.

 

I request you to please discuss this issue with Mr.Abdul Aziz or Mr. Samsuddin who knows better than me.

 

Looking forward for your kind reply.

 

Thanking You

 

Regards

 

Abdur Rahman

No comments:

Post a Comment