Pages
Wednesday, February 29, 2012
ஜித்தா மண்டல நிர்வாக குழு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 27-02-2012 திங்கள் அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா செனய்யா பகுதியில் ஜித்தா மண்டல நிர்வாக குழு மண்டல தலைவர் நௌஷாத் தலைமையில், சகோ.அன்சாரி அவர்களின் சிறிய மார்க்க உரையுடன் நடைபெற்றது. இதில் மண்டல தர்பியா முகாமை வரும் 16-03-2012 அன்றும், மக்கா பயண நிகழ்ச்சியை 23-02-2012 அன்று வைத்துக்கொள்வதென்றும் தேதிகளை மாற்றி முடிவெடுக்கப்பட்டது. மக்கா ஆன்லைன் நிகழ்ச்சி பற்றியும், அதன்பின் நடைபெற உள்ள கிளை கூட்டம் பற்றியும், சுலைமானியா கிளை சீரமைப்பு, தனுப் மற்றும் சிக்காகா புதிய கிளை உருவாக்குவது பற்றியும், கட்டிட நிதி திரட்டுவது, இலவச குர் ஆன் ஸ்பான்சர்கள் திரட்டுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் |
மண்டல ரத்ததான முகாமிற்க்கான பாராட்டு சான்றிதழ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-10-2011 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் நடந்திய இரத்ததான முகாமைனை பாராட்டி கிங் ஃபஹத் அரசு மருத்துவமனை சான்றிதழை வழங்கியது. அதனை மருத்துவமனையிடம் இருந்து பெற்ற முன்னாள் மண்டல தலைவர் சகோ. சௌக்கத் ஹூசைன், இரத்ததான பொறுப்பாளர் சகோ. சலாஹீதீனிடம் வழங்கினார்கள். இதுபோன்ற பாராட்டுகள், நம்மை இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் நடத்த ஆர்வமூட்டுவதாக அமைகின்றது. அல்ஹமதுலில்லாஹ் |
உரிமைக்காக ஜித்தா மண்டலம் நடத்திய வழக்கு
அல்லாஹ்வின் திருப்பெயரால்…………. 28-02-2012 ஜித்தா கடந்த 06-06-2011 அன்று ஜித்தா ப்ரைமான் பகுதியில் சிதம்பரம் தாலுக்கா பள்ளிப்படையை சேர்ந்த சகோ.மூஸா அப்துல்லா முஹம்மது அவர்கள் சாலையை கடக்கும்போது நாசர் என்ற எகிப்து நாட்டைச்சேர்ந்த சகோதரர் ஓட்டி வந்த காரில் மோதி கோமா நிலையில் ஜித்தாவிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தியினை மாநில தலைமையிலிருந்து ஜித்தா மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவருக்கு தக்க உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். உடன் விரைந்த ஜித்தா நிர்வாகி அப்துல் காதர் மருத்துவமனையில் அவரை பார்த்து விட்டு மருத்துவர்களிடம் இவர் சம்பந்தமாக ஏதும் தேவைப்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி தொடர்பு எண்களை கொடுத்து வந்தனர். இதனிடையில் ரியாதிலிருந்து சகோ. மூஸா அவர்களின் மகன் சகோ. முஹம்மது அனஸ் அவர்களும் வந்திருந்தார், அவரையும் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறி வந்ததுடன், அவ்வப்பொழுது அவரை சென்று பார்த்தும் ஆறுதல் கூறியும் வந்தனர். இந்த விபத்துக்கிற்க்கு காரணமாகிய எகிப்து ஓட்டுனரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதன்பின் கடந்த 04-07-2011 அன்று சகோ. மூஸா கோமா நிலையிலிருந்து மீளாமலே வஃபாத்தாகி விட்டார்கள். உடன் ஜித்தா மண்டல நிர்வாகிகள், சகோ. முனாபும், சலாவுதீனும், சகோ. அனஸிற்க்கு ஆறுதல் கூறி, இங்கு அடக்கம் செய்வதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, நமது ஜமாத் சகோதரர்களுடன் சென்று நல்லடக்கம் செய்தனர். இதன்பின் காவல் துறையை தொடர்பு கொண்டு இவருக்கான இழப்பீட்டு தொகையினை பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். காவல்துறை குறிப்பில் நடந்த விபத்திற்க்கு எகிப்து சகோ. நாசர் பக்கம் 25% தவறும் சகோ.மூஸா பக்கம் 75% தவறும் இருப்பதாக தீர்ப்பளித்து இருந்தனர், சௌதியில் விபத்தில் இறக்கும் வெளி நாட்டவர்களுக்கு முஸ்லீமாக இருந்தால் 1,25000 ரியாலும் முஸ்லீம் அல்லாதவருக்கு 75000 ரியாலும் இழப்பீட்டாக கொடுக்க வேண்டும் என்பது சட்டம், இதன் அடிப்படையில் சகோ. மூஸா குடும்பத்தினருக்கு 31250 ரியால் எகிப்து ஓட்டுனர் கொடுக்கவேண்டி இருக்கும். உடன் அவரை நமது நிர்வாகிகள் தொடர்பு கொண்ட பொழுது தன்னை சிறையிலிருந்து விடுவிப்பதாக சகோ. அனஸை சொல்ல சொல்லுங்கள், நான் வெளியில் வந்து இன்ஷூரன்ஸ் கம்பெனியை தொடர்பு கொண்டு அந்த தொகையின வாங்கி தந்துவிடுகின்றேன் என்று சொன்னார். அதனால் அவர் வெளிவர அனஸ் சம்மதித்துவிட்டார். வெளிவந்தவுடன் நாசர் தான் மூஸா மருத்துவ செலவிற்க்கு 24000 ரியால் கொடுத்துவிட்டதாகவும், இப்பொழுது 15000 ரியால்தான் தரமுடியும் என்று சொன்னார். இதில் உடன்பாடில்லை என்றாலும் அனஸும், நமது நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதன் பின் நாசர் 10000 ரியால், 7000 ரியால் என தொடர்ந்து குறைத்து தருவதாக பேச தொடங்கிவிட்டார். மேலும் உங்களால் முடிந்தால் இதனை பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் கோர்டில் சென்று வழக்கு கொடுங்கள் என்று அலட்சியமாக பேச தொடங்கிவிட்டார். பொதுவாக இந்தியர்கள் மொழி பிரச்சனையினாலும், வேலை நேரத்தில் விடுமுறை எடுத்து அலைய வேண்டி வரும் என்று தனது சொந்த விஷயத்திற்கே கோர்டிற்க்கு போக விரும்புவதில்லை, ஆனால் நமது நிர்வாகிகள் இவர்களுக்கு நியாயமான தொகை கிடைக்கவேண்டும் என்றும், அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி சிரமத்திற்க்கு அஞ்சாமல் கோர்டில் பார்த்துக்கொள்வோம் என்று கூறி வழக்கை 21-08-2011 அன்று கோர்டிற்க்கு எடுத்து சென்றனர். பல விசாரணைகளுக்குப்பின் 04-10-2011 அன்று சகோ.மூஸா குடும்பத்திற்க்கு மருத்துவத்திற்க்காக கொடுத்த 24000 ரியால் அல்லாமல் மேலும் 25000 ரியால் வழங்கவேண்டும் என்று எகிப்து ஓட்டுனர் நாசருக்கு கட்டளையிட்டு தீர்ப்பு வழங்கியது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும். அதன் பின் அந்த தீர்ப்பை காவல் துறைக்கு கொண்டு சென்று உறுதிப்படுத்தி, இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு கொண்டு சென்று அந்த தொகையினை பெற கடும் முயற்ச்சி எடுத்து 28-02-2012 அன்று 25000 ரியாலுக்கான (இந்திய ரூபாய் சுமார் 3.25 லட்சம்) செக்கினை பெற்று மறைந்த மூஸாவின் மகன் அனஸிடம் மண்டல நிர்வாகிகள் சகோ.முனாப் மற்றும் சலாவுதீன் இருவரும் வழங்கினார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜித்தா மண்டல நிர்வாகிகளுக்கு தன் நன்றியையும், அல்லாஹ் ஜித்தா மண்டல நிர்வாகிகளின் சேவையை முழுமையாக ஏற்று மறுமையில் இதற்க்கான நற்கூலியை வழங்குமாறும் பிரார்தித்தவராக ரியாத் புறப்பட்டார். அல்லாஹ்விற்கே எல்லா புகழும். |
ஜித்தா-செனைய்யா கிளையின்- குர்ஆன்-ஹதீஸ் பதாகைகள்
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் அழைப்பணியில் குர்ஆன் ஹதீஸ் பதாகைகள் அடங்கிய தட்டிகள் கம்பெனி கேம்புகளில் வைக்கப்பட்டு தாஃவா செய்து வருகிறது. தற்போது புதிதாக 23-02-2012 அன்று ஒரு இடத்தில் தட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மாதம் இரண்டு தடவை அல்லது மூன்று தடவை வெவ்வேறு வசனங்கள், ஹதீஸ்கள் அரபி- தமிழ் அல்லது ஆங்கிலம்- தமிழ் அல்லது மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Monday, February 27, 2012
இருதய அறுவை சிகிச்சைக்காக அவசர ரத்ததானம்
கடந்த 18ம் தேதி அன்று நெஞ்சுவலி காரணமாக ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமையில் சேர்க்கப்பட்ட நெல்லை மாவட்டம் மூளைக்காரன் பட்டியை சேர்ந்த சகோ. அஹமது கபீர் ராவுத்தருக்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப்பின் இதயகுழாயில் இரண்டு அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அதற்க்கு குறைந்தது 8 யூனிட் ரத்தம் தேவைப்படும் என்று சொன்னார்களாம், TNTJ ரத்ததான முகாமை அறிந்த அஹமது கபீர் நமது ரத்ததான பொறுப்பாளர் சகோ. சலாவுதீனை அணுகி உள்ளார். உடன் சகோ. சலாவுதீன் 8 பேர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்கள். ஆனால் அதில் 5 பேரிடம் இருந்துதான் ரத்தம் பெற முடிந்தது, உடன் சலாவுதீன் ரத்த வங்கியில் நமக்குள்ள பழக்கத்தை வைத்து உடன் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இன்ஷா அல்லாஹ் 27-02 அன்று அறுவை சிகிச்சை நடபெற உள்ளது. அவரின் உடல்நலம் வேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து.ஆ செய்வோம் |
02-03-2012 அன்று சகோ. பி.ஜெயின் ஆன்லைன் பயான்
ஜித்தா - ஷர்ஃபியா கிளை (தாயி) பேச்சு பயிற்ச்சி
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-02-2012 அன்று இஷாவிற்க்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளையில் இஷா தொழுகைக்கு பின் புதிய தாயிகளுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு மண்டல து.தலைவர் சகோ.ரஃபீ அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் சகோ. அமீன் அவர்கள் ஒழு செய்யும் முறை மற்றும் தொழுகை பற்றியும், சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பொறுப்புகள் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் புதிய தாயிகளை உற்சாகப்படுத்தினர். பின் வரும் நாட்களில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பிற்க்குப்பின், துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா ஆன்லைன் பயான்
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-2-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சார்பில் ஷர்ஃபியா பகுதியில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவா்கள் பங்ளிப்பு ஒரு முறை! பலன்கள் இறுதிவரை எனும் தலைப்பில் இணையதளம் வாயிலாக உரையாற்றினார்கள். இதில் சுமார் 125 சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, February 25, 2012
ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சு பயிற்ச்சி
அல்லாஹ்வின் அருட்கிருபையால் 23.02.2012 வியாழன் அன்று மஃக்ரிபிர்க்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் கடந்த இரண்டு வாரத்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய தாயிகளை உருவாக்கும் வகையில் பேச்சு பயிற்ச்சி நடைபெற்றது. இதற்கு ஜித்தா மண்டல துணைதலைவர் சகோ.ரஃபீக் பயிற்சியளித்தார்.ஆர்வமுடன் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ். |
ஜித்தா-மதீனா கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின், ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் காதர் அவர்கள் திக்ரின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதன் பின் மாநில தலைவர் சகோ.பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையினை கம்ப்யூட்டர் மூலம் ஒளிபரப்ப பட்டது. இதில் அதிக கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்
|
ஜித்தா-தபூக் கிளையின் மாற்று மதத்தவர்களுக்கான அழைப்பு பணி
அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் தபூக் செனையா கிளையில் பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 23/02/2012 அன்று இஷாவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ், சகோ, நிஜாம் அவர்களும் "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை!" என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள். இறுதியில் ஆர்வத்துடன் இஸ்லாத்தைக்குறித்த அவர்களின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலலிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 CDகள் வழங்கப்பட்டது. அல் ஹம்து லில்லாஹ்.
TNTJ தபூக் கிளையின் மனித நேய பனிகள்…!!!
TNTJ “தபூக்” கிளையில் வாராந்திர தர்பியா………..!
TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்!
Saturday, February 18, 2012
TNTJ மாநில கட்டிட நிதி
அல்லாஹ்வின் கிருபையால், ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை மூலம் சகோ. அமீர் அவர்கள் ரூபாய் 15000 க்குண்டான காசோலையும், 300 ரியாலும். சகோ. கமால் அவர்கள் ரூபாய் 10000 க்குண்டான காசோலையும் TNTJ மாநில கட்டிட நிதிக்காக கடந்த 15-02-2012 அன்று வழங்கினார்கள், அதனை ஷர்ஃபியா கிளை நிர்வாகிகள் மண்டல பொருளாளர் சகோ. யூனுஸிடம் ஒப்படைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
TNTJ ஜித்தா-செனைய்யா தாஃவா பயிற்சி வகுப்பு
அல்லாஹ்வின் அருளால் 17.02.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை சார்பில் தாஃவா மற்றும் பேச்சு பயிற்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ.ரஃபீக் தலைமையில் நடைபெற்றது. ஆர்வமுடன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Friday, February 17, 2012
TNTJதபூக் கிளை வாராந்திர பயான்......!!
அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 17/02/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் மூமீன்களின் பண்புகள்?! என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். சகோ, நிஜாம் அவர்கள் "மறுமை வெற்றி யாருக்கு?, சகோ,முஜாஹீத் அவர்கள் "நபி வழி திருமணம்!" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். 40 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ். |
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா………..!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 16/02/2012 வியாழன் இரவு 11/30 முதல் 12/30 வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ,அப்துல் அஜீஸ் அவர்கள் "TNTJ கூறும் அக்கீதா" (பகுதி-3) அடிப்படை கொள்கையை ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார். இதில்கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்று புத்துணர்ச்சியுடன் கலைந்து சென்றனர்,அல்ஹம்துலில்லாஹ்................!! |
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய முத்து வேல்முருகன்!
TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 17/02/2012 அன்று தபூக்[King Khaled Hospital] பணிபுரியும் [அல் மஜ்ஜால்-அல் அரபி] கம்பனியைச்சேர்ந்த-அரியலூர் மாவட்டம் - காரூரைச் சேர்ந்த சகோதரர் முத்து வேல் முருகன் அவர்கள் இஸ்லாத்தை [தனது வாழ்கை நெறியாக] தழுவிக் கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவர் தனது பெயரை இபுறாஹீம் என்றும் மாற்றிக் கொண்டார்.TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன், PJ அவர்களின் தர்ஜுமா மற்றும் "திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் பல இஸ்லாமிய 10 நுல்களையும், 10 CD களையும் வழங்கினார். அல்ஹம்து லில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை மாற்று மதத்தவர் அழைப்பு பணி!
அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் தபூக் கிளையில், தபூக் ASTRA FARMமில் பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 17/02/2012 வெள்ளி அன்று இஷாவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ், சகோ, நிஜாம் அவர்களும் "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை!" என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள். இறுதியில் ஆர்வத்துடன் இஸ்லாத்தை குறித்த அவர்களின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலலிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 CDகள் வழங்கப்பட்டது. அல் ஹம்து லில்லாஹ். |
Wednesday, February 15, 2012
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவிய TNTJ ஜித்தா
கடந்த 23-01-2012 திங்கள் அன்று பண்ருட்டியை சேர்ந்த சகோ. அப்பாஸ் அவர்கள், ஜித்தா மண்டல நிர்வாகிகளான சகோ. முனாப் மற்று, சகோ.சலாஹுதீனை தொடர்பு கொண்டு, 20-01-2012 அன்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உறவினரான பண்ருட்டியை சேர்ந்த சுலைமான் அவர்கள் இன்று இறந்துவிட்டதாகவும், ஜனாஸாவை அடக்கம் செய்வதற்க்கான அரசு வழிமுறைகளை அறிவுறுத்துமாறும் கேட்டுள்ளார்கள். உடன் அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை கூறி துணை தூதரகத்தின் மூலம் விரைந்து அந்த பணிகள் முடிய தக்க நடவடிக்கை எடுத்து மறுநாளே அடக்கம் செய்ய துணை புரிந்த்துள்ளார்கள். 24-01-2012 செவ்வாய் அன்று அடக்கம் செய்யப்பட்டது அதில் நம் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர். |
ஜித்தாமண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி
அல்லாஹ்வின் பேரருளால் 09.02.2012 வியாழன் அன்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீக் அவர்கள் பேச்சாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், இருகக்கூடாத பண்புகள், அவர்களின் நோக்கங்கள் எவ்வாறு இருந்தால் இந்த பயிற்சியினால் நாம் மறுமையில் நன்மைகளை பெறமுடியும் என்று விளக்கம் தந்த பின் பயிற்சியை துவங்கினார்கள். ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Tuesday, February 14, 2012
Letter to P.M
In the name of GOD, the most compassionate and gracious…