அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம், ஷர்ஃபியா கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயணத்துஆவுடன் புறப்பட்ட 50 பேர்கள் கொண்ட பேருந்திற்க்கு கிளைத்தலைவர் சகோ.முஸ்தபா மற்றும் கிளை செயலாளர் ஹனீஃபா பொறுப்பாளர்களாக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார்கள். பேருந்தில் நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை மற்றும் மதீனாவின் சிறப்புகள் ஆகியவை பற்றி சகோ. செய்யது முஸ்தபா உரை நிகழ்த்தினார்கள். மேலும் குபா மஸ்ஜித், கிப்லதைன் மஸ்ஜித், ஸபா மஸ்ஜித், மற்றும் உஹது மலைக்கும் அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஸ்ஜிது நபவியில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிய பின் மதிய உணவிற்க்கு முடிந்து ஜித்தா திரும்பும்பொழுது பேருந்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஷர்ஃபியா கிளை சார்பாக 20 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டது. ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது.. தொண்டர் அணியின் பணி பாராட்டத்தக்கவகையில் இருந்தது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ். |
Pages
▼
No comments:
Post a Comment