Pages

Saturday, December 31, 2011

TNTJ ஜித்தா-செனைய்யா வாராந்திர குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால் 23.12.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை பெரியவர்களுக்கான வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை குர் ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் 30.12.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் YOU TUBE மூலம் குர்ஆன் எளிதில் ஓதிட என்ற தலைப்பிலான சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்களின் பாடமும் பார்த்து விளக்கப்பட்டது. மிகவும் பயனுள்ளாக இருந்தது என்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

 


ஜித்தா - ஷர்ஃபியா கிளை நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 30-12-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் சார்பில் ஸபர் மாதம் பீடை மாதமா? என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

ஜித்தா - ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 30-12-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீா் மௌலவி அவர்கள் வஸியத் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 25-க்கும் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி துஆ உடன் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - தபூக் கிளையில் மாற்று மதத்தினருக்கு தாஃவா-2

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா - தபூக் கிளையில்,        தபூக் ஏர் பேஷில் உள்ள  மெஸ்ஹாலில்  பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 29/12/2011 வியாழன் அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "அகிலத்தை படைத்த கடவுள் யார்?" என்ற தலைப்பில் சிறப்பான முறையில் ஓரிறைக்கொள்கையை எடுத்துரைத்தார்.     இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  30 நூல்களும் வழங்கப்பட்டது.   அல் ஹம்துலில்லாஹ்     

                                                 

                                                             

ஜித்தா - தபூக் கிளையில் மாற்று மதத்திருக்கான தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா - தபூக் கிளையில், தபூக் STC யில்பணிபுரியும் அதிகமான மாற்றுமத சகோதரர்களுக்கு அவர்களுடைய கேம்பில் 29/12/2011 அன்று இஷாவிற்கு பிறகு கிளைத்தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சிறப்பான முறையில் ஓரிறைக்கொள்கையை எடுத்துரைத்தார்.     இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  30 நூல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.          

                                               

TNTJ தபூக் கிளையின் வாராந்திர பயான்!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 30/12/2011 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்
"சுன்னத் வல் ஜமாஅத் [என்பவர்கள்] யார்?" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோ, முஜாஹித் அவர்கள் நெல்லையில் நடைபெற்ற TNTJவின் 13வது பொதுக் குழுவின் சிறப்பம்சங்களையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்களையும் அழகிய முறையில் எடுத்துரைத்தார். துஆவுடன்,மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

TNTJ தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய கனகக்குமார்!

TNTJ தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய கனகக்குமார்!

 

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 30/12/2011 வெள்ளி அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவில் கலந்து கொண்ட இலங்கை கெண்டி மாவட்டம் - கம்பலைச் சேர்ந்த சகோதரர் கனகக் குமார் அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை [தனது வாழ்கை நெறியாக] தழுவிக் கொண்டார். அல்ஹம்து லில்லாஹ்.                                    தனது பெயரை முஹம்மது ரோஷான் என்றும் மாற்றிக் கொண்டார்.    TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன்,       PJ அவர்களின் தர்ஜுமா மற்றும் "திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் 10 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார். அல் ஹம்து லில்லாஹ்.

Saturday, December 24, 2011

மக்களிடம் மார்க்கத்தை கூற நீங்கள் தயாரா !!

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மார்க்க பிரசாரகர்களை அதிகப்படுத்துவது சம்பந்தமாக..

அன்புள்ள இஸ்லாமிய கொள்கை சகோதரர்களே,
கியாமத் நாள் வரை, இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என நம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
அனால், யார் அப்படி கொண்டு செல்வது ? , என்ற கேள்வி வரும்பொழுது, நாம் விலகிக்கொள்கின்றோம். தன் அளவில், தன் வட்டத்தில் இஸ்லாத்தை கூறுபவர்கலாக நம்மில் சிலர் இருந்தாலும், ஒரு கூட்டத்திற்கு முன் பிரசாரம் என்று வந்துவிட்டால் ஒதுங்கிக்கொல்கின்றார்கள். ஆகவே,

இஸ்லாமிய பிரசாரகர்களை அதிகப்படுத்தும் முயற்சியில், ஒரு எளிமையான வழியை TNTJ ஜித்தா மண்டலம் தங்களுக்கு முன்  வைக்கிறது. அதாவது...
"
நீங்கள் பேசி எங்களுக்கு அனுப்புங்கள்" என்பதுதான்.



விளக்கமாக..
1. PJ
அவர்களின் ஆக்கங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் (வீடியோ, ஆடியோ, புத்தகம், இப்படி எதாவது ..)  -  இது அவசியம் 
2.
ஐந்து நிமிடம் பேசுவதற்குண்டான  குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
3.
அதை மனதில் நிறுத்துங்கள் 
4.
நின்று கொண்டு, ஐந்து நிமுடம் பேசி, அதை உங்கள் மொபைல் அல்லது  மைக் மூலம் ஆடியோ பதிவு (record) செய்யுங்கள்.
   
இப்படி செய்யும் பொழுது, விரும்பினால் உங்கள் முன்னாள் வீட்டினரையோ அல்லது நண்பர்களையோ உங்களுக்கு முன் இருக்க செய்யலாம்
5.
பின்னர் www.wikisend.com என்ற இடத்தில அதை அனுப்பி, அதில் வரும் லிங்கை குறித்துகொள்ளுங்கள்.
6.
வாரம் ஒருமுறை வெள்ளி கிழமை அன்று, அந்த லிங்கை சகோ. ரபி மற்றும் சகோ.அன்சாரி அவர்களுக்கு அனுப்பிவய்யுங்கள் 


    'rafimailboxes@gmail.com'     
இவரின் மொபைல் எண் 0557968391


    'chekmohidein@gmail.com'    
இவரின் மொபைல் எண் 0500047327 

7.
தங்களின் முயற்சி சிறக்க அவ்வப்போது தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும்.

நம் அனைவரையும் இந்த புனித பணியில் இணைத்துக்கொள்ளவும், அதிகதிகமான சதகதுள் ஜாரியாவை நாம் பெற்றுக்கொள்ளவும் 
அல்லாஹ் அருள் புரியட்டும்

 

இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்



திருத்தப்பட்ட பைலாவி்ன் நகல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருத்தப்பட்ட பைலாவி்ன் நகல் வெளியிடப்படுகின்றது.  திருத்தப்பட்ட பைலாவிற்கான ஒப்புதல் கடந்த 11-12-2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெறப்பட்டது.
TNTJ உறுப்பினர்கள் திருத்தப்பட்ட பைலா குறித்து கருத்து/திருத்தங்கள் தெரிவிக்க விரும்பினால் தங்களின் உறுப்பினர் அட்டையின் நகலுடன் தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
பொதுச் செயலாளர்
ரஹ்மதுல்லாஹ்

ஜித்தா-தபூக் கிளையில் செயல் முறை விளக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை மர்கஸில் 23/12/2011வெள்ளி அன்று காளை 10 மணியளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களுக்கு [நபிவழித் தொழுகை] செயல்முறை விளக்கம் மற்றும் திருக்குர்ஆன்-அல்ஹம்து சூறா,மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத பயற்ச்சியளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.                
      

இலங்கை சகோதரருக்கு இலவச நூல்கள்,CDகள்!

ட்ரிங்கோ சமாலியாபுரம்,திருக்கோனமலை இலங்கையைச் சேர்ந்த முஹம்மது உசேன் என்ற சகோதரர் கடந்த 2 மாதமாக TNTJ தபூக் கிளை மர்கஸில் நடைபெரும் வாராந்திர பயானில் கலந்து கொள்ளக்கூடியவர். இவர் இதற்கு முன் இதுபோன்ற அறிவுப்பூர்வமான பயான்களை கேட்டதே இல்லையாம்! எனவே, நான் வருகின்ற 28.12.2011 அன்று நாட்டுக்கு  போகவிருக்கிறேன், எனக்கு TNTJ வின் உரைகளடைங்கிய CDகளையும், நூல்களையும் தனக்கு தந்துதவும்படி கேட்டுக்கொண்டார். எனவே, அவருக்கு PJ அவர்களின் தர்ஜுமா குர் ஆன், 20திற்கும் மேற்பட்ட நூல்கள்,அனைத்து தொடர் உரைகளின் 25 CDகள் அனைத்தும் TNTJ தபூக் கிளை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.        

TNTJ ஜித்தா தபூக் கிளையின் வாராந்திர பயான்

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையிள் 23/12/2011 வெள்ளி அன்று ஜும்ஆவிற்கு பின் TNTJ தபூக் கிளை மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ,  அப்துல் அஜீஸ் அவர்கள்    "ஸபர் மாதமும் முஸ்லிம்களின் மூடநம்பிக்கைகளும்"  என்ற தலைப்பிலும்,சகோ,முஹம்மது சாலிஹ் அவர்கள்"பாதிக்கப்பட்டவரின் பிராத்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பிலும்,சகோ,முஜாஹித் அவர்கள்                  "அல் குர்ஆன் ஓர் அற்புதம்!" என்ற தலைப்பிலும்உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45 நபர்கள் கலந்து கொண்டனர்து.ஆ மற்றும் மதிய உணவிற்கு பின்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.                                                   

TNTJ “தபூக்” கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய அருள் மணி.

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை  மர்கஸில் 23/ 12/ 2012 வெள்ளி அன்று [TABUK - STC யில் பணிபுரியும்] விருதாச்சலத்தை சேர்ந்த சகோ, அருள் மணி அவர்கள் ; சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக கலிமா மொழிந்து ஏற்றுக்கொண்டார்அவர் தனது பெயரை அப்துல்லாஹ் வாக மாற்றிக் கொண்டார்.  அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு கிளைத்தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் PJ வின் தமிழாக்க குர் ஆன்திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்.மற்றும் பல இஸ்லாமிய நூல்களையும் வழங்கினார்.அல் ஹம்து லில்லாஹ்.