Pages

Sunday, June 30, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் "சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கிளை ஆலோசனை கூட்டம்"

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால் ....

28/06/2013- வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ்
மண்டலம் செனைய கிளையின் "சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கிளை ஆலோசனை
கூட்டம்" அல்-போசான் கேம்ப்-ல் நடைபெற்றது ...

கிளை தலைவர் சகோ: அப்துல்ஹகீம் தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது..

இக்கூட்டத்தில் சகோ:சலீம் சேட் அவர்கள் "ரமலானின் சிறப்புக்கள் " என்ற
தலைப்பில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து கிளையின் செயல்பாடுகள், எதிர்நோக்கும் ரமலான் மாதத்தில்
பித்ரா வசூல் சம்மந்தமாகவும் , கிளையின் இப்தார் நிகழ்ச்சி
சம்மந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது ..

இந்த கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் பலரும் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்...

ஷரபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 28-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- ஜித்தா மண்டலம் - ஷரபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றுது. அதில் நோன்பு என்ற தலைப்பில் சகோ. செய்யது முஸ்தபா உரை
நிகழ்த்தினார்கள். உரைக்குப்பின் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்பட்டது. அனேக சகோதரா்கள் கலந்து கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி
இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம்

ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல அல்லாஹ்வின் கருணையால் கடந்த 27-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் - ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பித்ரா
மற்றும் தர்பியா நிகழ்ச்சி நடைபெறுவது சம்பந்தமாகவும், நிர்வாகம்
சம்பந்தமாகவும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே
நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள்

மெகா டிவியில் பி.ஜே அவர்கள் உரையாற்றும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள்
– காணத்தவறாதீர்கள்!

Friday, June 28, 2013

Description: Join Only-for-tamil

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்:

1. 
மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள்.சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. 
உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும்.சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. 
உடல் எடை குறைவு -சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. 
நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம்.அவற்றை குறைவாக,அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. 
மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால்,மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. 
பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுங்கள்.ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் -பழங்கள்50முதல்60 %வரை சத்துக்களை இழக்கின்றன.

7. 
பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.
உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.
புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. 
தக்காளி,வெங்காயம்,பூண்டு,எலுமிச்சை,கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. 
சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. 
மிக சிறிய,உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %)நமக்கு மனச்சுமை (Stress)வருகிறது.

13. 
மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. 
எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect )இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள்.நீங்கள் perfectஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள்.இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. 
சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் (Delegate ).

16.
கோபம்,வருத்தம்,மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. 
அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.வேலையை விட்டு செல்பவர்களை விட,அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார்!

18. 
குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. 
உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி,கணினி,வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. 
உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. 
உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்;அது மோசமான பழக்கம்;மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. 
மகிழ்ச்சியுடனும்,பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. 
சிரிப்பு (Laugh therapy)புற்று நோய்,இதய நோய்,மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. 
தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. 
உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. 
நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள்.நல்லதே நடக்கும் என (Optimist )நம்புங்கள்.

27. 
மகிழ்வாக வாழும் கணவன்-மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு.தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. 
நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. 
வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. 
பழைய நட்புகளை விடாது தொடருங்கள்.புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள்.நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் !

பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் !

பெற்றோருக்கு வயதாகிவிட்டால்அதிலும் தள்ளாமை வந்து விட்டால்அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. நல்ல வளர்ப்பால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால்,அவர்களை அவன்அன்பும்ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான்.  இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்... பெற்றோர் படாதபாடு பட்டுபடிக்க வைத்து ஆளாக்கிஉத்தியோகம் கிடைக்க செய்துஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி உள்ளம் பூரித்துஅகமகிழ்ந்து அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகிபெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால்,மாமியார்மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லதுஎது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரைமாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பதுஎனக்குத் தெரியாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால்வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூடமனைவியின் பக்கம் சேர்ந்துஇவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்துஇரவுபகலாக ஆலோசித்து,இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம்இஷ்டம் போல் வரலாம்,சந்தோஷமாக இருக்கலாம்...என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி,அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்துபணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கிதிரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால்பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்துஅன்பையும்,ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய்,தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோஅல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம்,அவர்களை (நிந்தனையாக)ச் 'சீஎன்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி,என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துபரிபாலித்த பிரகாரமே,நீயும் அவ்விருவர் மீதும்அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்துசிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும்,அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். 

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்துநாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, "என்னுடைய ரப்பே! நீ எனக்கும்எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும்எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும். பிள்ளையைப் பெற்றுவளர்த்துஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும்கருத்துமாய் பாதுகாத்து,இரவுபகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய்,தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்தானா கதி! தாய்தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம். 
ஏக இறைவனின் திருப்பெயரால்....

وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءتْ مَصِيرًا {6

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான்.6 அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. திருக்குர்ஆன்.48:6

பொய் பேசுவது முனாஃபிக் தனத்தின் அடையாளம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பொய் பேசுவதால் ஏற்படும் உலக-மறுமை இழப்புகளை இதுவரை தொடர்ந்துப் பார்த்து வருகிறோம்.

பொய் பேசி, பொய்யான செயல்களில் ஈடுபட்டு அதனால் அடையும் ஆதாயமும் கூட பொய்யர்களுக்கு நிரந்தரமாக அமைவதில்லை, அதுவும் அற்பத்திலும் அற்பம் தான்.

அற்ப சந்தோஷத்துடன் விட்டாலாவது பரவா இல்லை எனலாம், அதுவுமில்லை அற்ப சந்தோஷத்தை அளித்து விட்டு நிரந்தர நிம்மதியைப் பறித்து விடும் என்பதை இதற்கு முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.

உலகில் இப்படி என்றால் மறுமையில் எப்படி இருக்கும் ? என்பதை சிந்தித்துப் பாரத்துக் கொள்ளுங்கள்.

மரணத்திற்குப் பின் கியாமத் நாள் வரை பொய் பேசுபவருடைய தாடையிலிருந்து பிடரி வரை பலமான இரும்பு கொக்கியால் இழுத்த வண்ணமே இடைவிடாது நடைபெறும் வேதனை !.

யாருக்கு மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வுக்கு இடையூறாக அமையும் பொய்யை பேச விரும்ப மாட்டார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார்கள், பொய் சத்தியம் செய்து காரியம் சாதிக்கத் துணிய மாட்டார்கள்.

யாருக்கு மறுமையின் மீது அறவே நம்பிக்கை இல்லையோ அவர்களே பொய் பேசுவார்கள், பொய் பேசி வியாபாரம் செய்ய விரும்புவார்கள், பொய் சத்தியம் செய்து காரியம் சாதித்துக் கொள்ளத் துணிவார்கள்.

மீட்சி பெற முடியாத பாவம்.
பொய் பேசுவது, பொய்யான செயல்களில் ஈடுபடுவது மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் கொடிய வைரஸ் என்பதால் பொய்யர்கள் ஏதாவது ஒரு வழியில் நுழைந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காக மறுமையை மறுத்து அல்லது மறந்து உலக சுகபோக வாழ்வுக்காக பொய்யில் ஊறித் திளைக்கும் பொய்யர்களை இறுதியாக முனாஃபிக்குகளின் பட்டியலில் சேர்த்து அவர்களை நரகிற்கு உரியவர்களாக்கி விட்டது இஸ்லாம்.

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டு விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும ;போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். 2459. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சத்தியத் தூதர்(ஸல்) அவர்கள் சத்திய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களை சந்திக்கும் பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாத்தை எதிர்ப்போரை சந்திக்கும் பொழுது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்தில் பெயரளவு நுழைந்து கொண்டு இரட்டை வேடம் பூண்டனர் யூதர்கள்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர் களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர். . திருக்குர்ஆன். 2:14

இரு தரப்பிலும் தங்களுடைய ஆட்களாக காட்டிக்கொண்டவர்கள் இஸ்லாத்தில் உள்ளதை இல்லாதது போலும் இல்லாததை உள்ளது போலும் கூறிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்ற மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை விளைவித்து மொத்த மக்களுடைய நிம்மதியையும் இழக்கச் செய்து வந்தனர்.

அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் கொண்டு அவனுடைய மார்க்க விஷயத்தில் பொயு;யுரைத்து வந்தக் காரணத்தால் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டு சாபமிட்டு முனாஃபிக் என்ற இழிச் சொல்லைச் சூட்டி நரகிற்கு உரியவர்களாக்கினான்.

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. திருக்குர்ஆன். 48:6.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டிய பொய் பேசுதல், வாக்குறுதி மீறுதல், ஒப்பந்த மோசடி செய்தல், வழக்காடும் போது பிரதிவாதியை ( வசமாக மாட்டிக்கொண்டான் என்றுக் கருதி ) அவனுடைய சொந்த காரியங்கள், குடும்ப நிகழ்வுகளைப் பேசி அவமதிப்பது போன்ற துர்குணங்கள் நான்கும் பொய் வகையைச் சார்ந்தவைகளாகும்; அதனால் இதில் எதாவது ஒன்று யாரிடம் இருந்தாலும் அவன் முனாஃபிக்காகி விடுவான் என்று எச்சரிக்கை செய்தார்கள், முனாபிக்குக்குரிய தண்டனை நரகம் தான்.  

நரகிலிருந்து நம்மை காக்கவே இஸ்லாம் எனும் அருட்கொடையை இறைவன் நமக்கு வழங்கினான். ஆனால் பொய் பேசி, பொய்யானக் காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அருட்கொடையை நிராகரித்து விட்டு நரகிற்கு நாமே நம்மை தள்ளிக் கொள்ளலாமா ?. சிந்தித்தால் சீர் பெறலாம்.

நாம் நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் வல்லோன் அல்லஹர்விடம் எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள் மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள். வழி. என்று கேட்கின்றோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். 2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 3. தீர்ப்பு நாளின்1 அதிபதி. 4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! 6இ 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள்இ மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

தொழுகையை முடித்து விட்டு வந்து அவனுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழியை நாமே தேர்ந்தெடுத்தக் கொள்ளலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்.

அதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான யூதர்களின் பொய் பேசும் பழக்கத்திலிருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும்.

இதுவரை பேசி வந்த பொய்களுக்கு, பொய் பேசி செய்து வந்த வியாபாரங்களுக்கு, பொய் சத்தியம் செய்து அற்பசந்தோஷத்தை அடைந்து கொண்டதற்கு இன்னும் வேறு வழிகளில் ஈடுபட்டு வந்த பொய்யானக் காரியங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொ ண்டால் அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ் மன்னித்து விடுவான்.

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். திருக்குர்ஆன் 4:110.

கடந்த காலங்களில் பேசிய பொய்கள் மற்றும் பொய்யான செயல்கள் அதிகமானவைகள் அவைகள் குறைத்து மதிப்பிடக் கூடியவைகள் அல்ல ? ஒவ்வொன்றும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியவைகள், நினைத்துப் பார்க்கவே வெட்கமாகவும் அறுவருப்பாகவும் இருக்கிறது ! அதனால் அவைகளை எப்படி அல்லாஹ் மன்னிப்பான் ?.

என்று அல்லாஹ்வின் அள்வற்ற அருளின் மீதும், நிகரற்ற அன்பின் மீதும் நம்பிக்கை இழந்து பொய்யில் தொடர்ந்து வீழ்ந்து விடாமல் இனி வரும் காலங்களில் பொய் பேசுவதில்லை, பொய்யான செயல்களில் ஈடுப்படுவதில்லை என்று முடிவு செய்து அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் அவைகள் மலை அளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! திருக்குர்ஆன் 39:53.

எழுதியபடி என்னையும் வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!. 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி
தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

நயவஞ்சகத்தின் நான்கு அடையாளங்கள்.

நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.