Monday, July 29, 2013

ஏகத்துவவாதிகளின் ஒற்றுமையை பறைசாற்றிய ஜித்தா இப்தார்!

 
 ஏகத்துவவாதிகளின் ஒற்றுமையை பறைசாற்றிய ஜித்தா இப்தார்! 

அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல TNTJ வின் இப்தார் நிகழ்ச்சி 26-07-2013 வெள்ளி அன்று நகரின் மையப்பகுதியான பின்லாடன் அரங்கில் நடைபெற்றது. 700 க்கும் அதிகமான ஜித்தா நகர கிளைகளை சேர்ந்த சகோதரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒருவரையொருவர் போட்டியிட்டு தன்னார்வத்துடன் பலரும்  உபசரித்ததும், அரங்க ஒழுங்குகளை பேணி உரைகளை செவிமடுத்ததும் கொள்கை சகோதரர்களின் சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும்  உணர்த்தியது. நோன்பு திறக்கும் முன்னதாக நிகழ்த்தப்பட்ட உரையில் மண்டல அழைப்பாளர் மேலப்பாளையம் ஹக் முஹைதீன் "தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் பேசினார். மக்ரிப் தொழுகைக்கு பிறகு மண்டல அழைப்பாளர் முஹாஜிர் "பொருள் கொடுத்து அருள் பெறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் நான்கு மாற்றுமத சகோதரர்களும் பங்கேற்றனர். நால்வருக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஒரு சகோதரர் அரங்கில் இஸ்லாத்தை ஏற்றது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பவிழாவைப்போல் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  700 சகோதரர்களுக்கும்  PJ அவர்களின் "துஆக்களின் தொகுப்பு" நூல்கள் மற்றும் "ரியாதுஸ் ஸாலிஹீன்" தொகுப்பின்  700 ஆடியோ சீடிக்கள், லைலத்துல் கத்ரை விளக்கும் 700 துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாநாடைப்போல் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல துணைத் தலைவர் ரபீ தலைமையேற்றார். சகோ. ஷௌகத் உசேன் தொகுத்து வழங்கினார். மண்டல செயலாளர் அப்துல்பாரி நன்றியுரை ஆற்றினார். இரவு உணவுக்கு பின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.


Monday, July 22, 2013

Ifthar Notice





செனையா கிளை - "கிளை பயான் & இப்தார் விருந்து"






அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால் ...

18/7/2013-வியாழகிழமை  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செனையா கிளை சார்பாக அல்-ரஷீத் கேம்ப்-ல்  "கிளை பயான் & இப்தார் விருந்து" ஏற்பாடு செய்யப்பட்டது..

கிளை தலைவர் சகோ:அப்துல் ஹகீம் அவர்கள் தலைமையில்
சகோ: சலீம் செட் அவர்கள் "நல்ல அமல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் ..

கிளை நிர்வாகிகள் , உறுபினர்கள் உட்பட 10கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்....

ஜித்தா மண்டலம் செனையா கிளை - "இப் தார் விருந்து"





அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால்.......
19/7/2013-வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பாக "இப்தார் விருந்து" ஏற்பாடு செய்யப்பட்டது..
இந்நிகழ்ச்சிக்கு செனையா பகுதியை சார்ந்த 130கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, July 10, 2013

PRESS RELEASE

Consulate General of India

Jeddah

***

 

Press Release

 

 

1. All Indian Nationals are hereby informed that if the coming July 9 (Tuesday) happens to be the first day of Ramadan, the finger printing process at Jeddah Tarheel would start after Traweeh prayer and end at Suhoor (i.e. from 10:30 PM to 3:30 AM (approximately). All Indian nationals concerned are required to be present at Tarheel well before the said time. However, normal working hours would be observed if Ramadan does not start on July 9, 2013.

 

2. The Holders of stickers for June 25 and July 2, 2013, who had come to Tarheel on those days but could not be fingerprinted due to paucity of time, are hereby informed that they can come to Tarheel on July 9, 2013 (Tuesday) directly for fingerprinting. They are not required to take fresh tokens from the Consulate. 

 

3. All Indian Nationals who have got final exit stamped on their passports / ECs should leave the Kingdom as soon as possible. In any case, they should leave the Kingdom within 30 days from the date of stamp of final exit.

 

4. In case of any problems regarding booking or unavailability of seats, they should contact Consul (Community Welfare) in the Consulate General of India immediately and register themselves in order for appropriate action.

 

5. A call would be made to the Holders of blank stickers to come to Tarheel on July 16, 2013 (Tuesday). Those who receive such calls should be present at Tarheel without fail. If they fail to do so, they would lose their chance for fingerprinting.

 

6. Those who have been fingerprinted would be called to collect their passports / ECs form the Consulate. They should not visit the Consulate for this purpose without receiving such call. 

 

7. Those Indian nationals who are not covered under Amnesty for any reasons are advised to go back to their Kafeels (Sponsors) and settle their issues. In case of need, they should contact the concerned section at the Consulate.  

     

 8. The Jeddah Chambers of Commerce & Industry has launched a special website for job seekers. Those Indian nationals who are interested to utilize this opportunity should contact the Commercial Section (Mr. Amjad Sharief) of the Consulate or its missions in Makkah and Madinah and register themselves there as soon as possible.

 

9. Encouraged by the huge response from both the job seekers as well as the companies during the last fairs, the Consulate General of India proposes to hold another job fair details of which would be announced through the media channels at an appropriate time.

 

10. It is reiterated that those Indian nationals who have not yet registered themselves with the Consulate, should do so without further loss of time. 

Vital Information, Let's talk Health today

Tuesday, July 9, 2013

நீங்களும் பாருங்கள்..... பிறரையும் பார்க்க தூண்டுங்கள்.....

மெகா டிவி ஒளிபரப்பு கட்டண சேனலாக மாறிவிட்டது என்ற கவலையில் உள்ள சகோதரர்களுக்கு ஆறுதலான செய்தி. 

சகோ. பிஜே அவர்கள் இந்த வருட ரமலானில் உரையாற்றும் "மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" www.tntj.tv என்ற இணையதளத்தில் ஒளிபரப்ப உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரமலான் முழுவதும் காணத்தவறாதீர்கள். பிறரை காண தூண்டுங்கள்.

Saturday, July 6, 2013

ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 5-72013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. அதில் சகோ. சௌகத் உசேன் அவா்கள் அமல்கள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜி்த்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் 5-7-2013

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 5-7-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -
ஜித்தா மண்டல நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பித்ரா, இ்ப்தார்
மற்றும் சில நிர்வாகம் சம்பந்தமாக கலந்தாலோசனை செய்யப்பட்டது. துஆவுடன்
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

அல்லாஹ்வின்பேரருளால் TNTJ

ஜித்தாஹ்மண்டலம்"தபூக்"கிளைமர்கஸில்05/07/2013வெள்ளியன்றுஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாகநடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ் அவர்கள்"நோன்பின் பிறதான
நோக்கம் இறையச்சம்!"என்றதலைப்பில்:உண்மையான "தக்வா"என்றால் என்ன? அதை
பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?அது நமது உள்ளத்தில் எவ்வாறான
தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்?
இன்னும் இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் நோன்பு என்ற வணக்கம்
பயிர்ச்சியளிக்கிறது?என்பதை அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன்
எடுத்துரைத்தார்.

மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் "ரமழானும் இறையருளும்"என்றதலைப்பிலும்,

மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது
ரபீக் அவர்கள் "ரமழானும் ஈமானும்!"என்றதலைப்பிலும்
மிகச்சிறப்பாகசிற்றுரையாற்றினார்கள்.

இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட
பலர்கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நபிவழிதுஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி
இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:
--------------------------------------
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல)
செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட
அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)

செனைய கிளை-"பயான் நிகழ்ச்சி & மாதந்திர கூட்டம்"

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால்.. 5/7/2013-வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் "பயான் நிகழ்ச்சி & மாதந்திர
கூட்டம்" செனைய பாட்சி கேம்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளை
தலைவர் சகோ:அப்துல் ஹகீம் தலைமை தாங்கினார்..சகோ: சலீம் சேட் அவர்கள்
"ரமலானின் மகத்துவமும்.. துவாகளின் முக்கியத்துவமும்.." என்ற தலைப்பில்
உரையாற்றினார்.. இதனை தொடர்ந்து மண்டலம் நடத்தும் இப்தார் , செனைய கிளை
இப்தார், பித்ரா வசூல் சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது...இக்கூட்டத்திற்கு
மண்டல செயலாளர் சகோ: அப்துல் பாரி & மண்டல பொருளாளர் சகோ: யூனுஸ் மற்றும்
கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட 25-கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர் ..
துவாஉடன் கூட்டம் நிறையுற்றது

Friday, July 5, 2013

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

"ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ (1898)

முஸ்லிம் (1956)

"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ (1899)

முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

"ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

"ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். "ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

"ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

"சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

"நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

Print This page
வாழ்க்கைக்கு உதவும் நபி மொழிகள்!

                              



எவன் தன்னை அறிகின்றானோ? அவன் இறைவனை அறிந்து கொள்கிறான்!(நபிமொழி)
 
உடல் தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.(நபிமொழி)
பொறாமை நற்செயலை அழித்துவிடும்.(நபிமொழி)
ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது!உள்ளம் சீர் பெறாதவரை ஈமான் சீர் பெறாது!(நபிமொழி)
மக்களின் பணியாளனே தலைவனாவான்.மக்களுக்கு நல்லதை செய்பவன் சிறந்தவனாவான்!(நபிமொழி)
உங்களில் அளவுக்கதிகமாக வீண் பேச்சுக்கள் பேசுபவனும்,தற்பெருமையாக பேசுபவனும் என்னால் வெறுக்கப்பட்டவனாவான்.(நபிமொழி)
அண்டை வீட்டாரை துன்புறுத்தியவர் மறுமையில் கை,கால் இல்லாதவராய் எழுப்பப்படுவார்.(நபிமொழி)
அமைதியான குணம் பெற்றவர்கள் இம்மையிலும்,மறுமையிலும் சிறப்பு பெற்றோர் ஆவர்.(நபிமொழி)
உன்னைத் தள்ளியவரை நீ அணைத்துக்கொள்,உனக்கு அநீதி செய்தவரை நீ மன்னித்து விடு,உனக்கு தீங்கிழைத்தவருக்கு நன்மையே செய்!(நபிமொழி)
உங்களை ஒருவர் உபசரித்து உணவளிக்கத் தவறினாலும்,அவர் உங்களது இல்லம் வரும்போது உணவளித்து உபசரிக்க வேண்டும்.(நபிமொழி)