Thursday, February 26, 2009

ஜெத்தா மண்டல TNTJ வின் புதிய நிர்வாகிகள் தேர்வு கட‌ந்த 26.02.2009 அன்று இரவு 8.30 மணி அளவில் ஷரஃபியா - ஸ்னாக் ரெஸ்டாரண்ட்-ல் சவூதி TNTJ கூட்டமைப்புத் தலைவர் சகோ. பஷீர் மெளலவி தலைமையிலும், ரியாத் மண்டலத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஜெத்தா ம‌ண்ட‌ல‌திற்கு உட்ப‌ட்ட‌ கிளைக‌ளைச் சேர்ந்த‌ அனைத்து கிளை நிர்வாகிக‌ளும் க‌ல‌ந்து கொண்டு புதிய‌ ம‌ண்ட‌ல‌ நிர்வாகிக‌ளை தேர்வு செய்த‌ன‌ர். முன்ன‌தாக‌ மாநில‌த் துணைத் த‌லைவ‌ர் சகோ. ப‌க்கீர் முஹ‌ம்ம‌து அல்தாஃபி அவ‌ர்க‌ள் ‘கொள்கையில் உறுதி’ என்ற‌ த‌லைப்பில் தொலைபேசி வாயிலாக‌ உரையாற்றினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய‌ ஜெத்தா ம‌ண்ட‌ல‌ நிர்வாகிக‌ள்:

தலைவர்: M. சலிம் சேட் - பரமக்குடி - 0502428818
பொதுச் செயலாளர்: P.M. அப்துல் பாரி - மேலப்பாளையம் - 0567122902
பொருளாளர்: S. நௌஷாத் அலி - மேலக்காவேரி - 0562363972
துணைத் தலைவர்: J. சையது முஸ்தபா - எமனேஸ்வரம் - 0567140437
துணைப் பொதுச்செயலாளர்: M.O. கபீர் - மேலப்பாளையம் - 0507021643

பின்ன‌ர் சவூதி கூட்டமைப்புத் தலைவர் சகோ. பஷீர் மவுலவி அவ‌ர்கள், ‘நிர்வாகிக‌ளின் ப‌ண்புக‌ள்’ என்ற‌ த‌லைப்பில் உரையாற்றினார். ஜெத்தா மண்டல முன்னாள் த‌லைவ‌ர் சகோ. செள‌க‌த் ஹூசைன், பொதுக்குழு தீர்மான‌ங்களை வாசிக்க‌, உறுப்பின‌ர்க‌ள் அனைவரின் ஆதரவோடு ஏக‌ம‌ன‌தாக‌ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு தீர்மான‌ங்கள்:

1. ஜெத்தா TNTJ வினால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, ஒளிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட அனைத்து சிடி ம‌ற்றும் கேச‌ட்டுக‌ள் ந‌ம்முடைய‌ அமைப்பின் பொருட்செல‌வினால் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌வை. இவற்றைத் த‌வ‌றாக‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் முன்னாள் பொறுப்பாள‌ர் ச‌கோ ஷிப்லி அவ‌ர்க‌ளை இந்த‌ பொதுக்குழு மிக‌ வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கின்ற அதே வேளையில், அவற்றை அவர்களது தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்புவ‌தையும் உட‌னே நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது.

2. ஜெத்தா TNTJ வின் முன்னாள் பொறுப்பாளர் ச‌கோத‌ர‌ர் ஷிப்லியின் மீது மாநிலத் தலைமை ந‌ட‌வ‌டிக்கை எடுத்ததை இப்பொதுக்குழு முழும‌ன‌துட‌ன் வ‌ர‌வேற்கின்ற‌து.

இறுதியாக, ஜெத்தா TNTJ மண்டலப் பேச்சாளர் சகோ. ஃபிர்னாஸ் மவுலவி அவர்கள், ஜித்தா மண்டலத்தின் பொதுக்குழு ஒரு தனித் தன்மையை நிலை நாட்டியுள்ளது என்றும் இந்த தேர்தல் சிறப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்ததை சிலாகித்தும் பேசி நன்றியுரையாற்றினார். பிறகு இர‌வு சிற்றுண்டிக்குப் பிறகு துஆவுட‌ன் நிக‌ழ்ச்சி இனிதே நிறைவு பெற்ற‌து.

எல்லாப் புக‌ழும் இறைவ‌னுக்கே!